சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

🕔 January 22, 2022

– அஹமட் –

சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, சந்தேக நபரை, தான் மன்னிப்பதாக – பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, பதில் நீதவான் முன்னிலையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த பதில் நீதவான், அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

தமது மதரஸாவில் ஓதும் 07 வயது சிறுவனை, அங்குள்ள முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவர், மிகக் கடுமையாகத் தாக்கியமையை அடுத்து, சிறுவனின் தந்தை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து தலைமறைவாகியிருந்த முஅல்லிம் (ஆசிரியர்), கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை சரணடைந்தார்.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

Comments