ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு

🕔 January 19, 2022

னாதிபதியின் செயலாளராக, பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீ.பி. ஜயசுந்தரவுக்கு எதிராக, சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை மேற்கொண்டு வந்தமையினை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி செனரத், இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார்.

பிரதமரின் செயலாளராக காமினி செனரத்துக்குப் பதிலாக நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க நாளை (20) கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்