உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன?

🕔 January 13, 2022

லகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களில் இலங்கை 102ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (The Henley Passport Index) வெளிட்ட பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கென 111 நாடுகள் இந்தப் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை, லெபனான் மற்றும் சூடான் ஆகியவை இந்தப் பட்டியலில் ஒரே இடத்தைப் பெற்றுள்ளன.

சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம் வழங்கிய பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு தொடக்கம் உலகில் பயணத்துக்கு மிகவும் ஏற்ற கடவுச்சீட்டுக்களை இந்தச் சுட்டி வெளியிட்டு வருகின்றது.

2022 இன் உயர்ந்த தரவரிசையில் உள்ள 10 கடவுச்சீட்டுக்கள் பின்வருமாறு:

  1. ஜப்பான், சிங்கப்பூர்
  2. ஜெர்மனி, தென் கொரியா
  3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின்
  4. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன்
  5. அயர்லாந்து, போர்ச்சுகல்
  6. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா
  7. அவுஸ்ரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா
  8. போலந்து, ஹங்கேரி
  9. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா
  10. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா

மிகக் குறைந்த தரவரிசையிலுள்ள 10 கடவுச்சீட்டுக்கள்

  1. இலங்கை, லெபனான், சூடான்
  2. பங்களாதேஷ், கொசோவோ, லிபியா
  3. வட கொரியா
  4. நேபாளம் மற்றும் பாலஸ்தீன்
  5. சோமாலியா
  6. யெமன்
  7. பாகிஸ்தான்
  8. சிரியா
  9. ஈராக்
  10. ஆப்கானிஸ்தான்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்