லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

🕔 January 13, 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிருவாக செயலாளர் ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முத்துராஜவெல – மாபிம லிட்ரோ நிறுவனத்துக்கு இன்று சென்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்