இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

🕔 January 13, 2022

நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1400 பில்லியன் ரூபா (01 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா சிங்கள தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த விபரங்களைக் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 1400 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளமை ரகசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரே ஆண்டில் அச்சிடப்பட்ட மிகப் பெருந்தொகை பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments