தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

🕔 December 20, 2021

ரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், 2022ல் பாடசாலைகளைத் திறந்து பரீட்சை நடத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கினார்.

“பாடசாலைகள் 23 டிசம்பர் 2021 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டுக்கு 03 ஜனவரி 2022 அன்று மீண்டும் திறக்கப்படும். விடுபட்ட கல்விச் செயல்பாடுகளை நாங்கள் கவனிக்க வேண்டியிருப்பதால், முதல் பருவம் ஏப்ரலில் முடிவடையும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 03ஆம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும் நடைபெறவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதற்கான கால அவகாசங்களை ஒதுக்கியுள்ளது” என்றார்.

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்ப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்; இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தரம் ஒன்று புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமையாக ஜனவரி மாதத்திலேயே ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்