நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல்

🕔 December 2, 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி நீதிமன்றத்தினால் நிரபராதியாக இன்று விடுவிக்கப்பட்ட போதும், அவர் வீடு திரும்புவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என தெரியவருகிறது.

விளக்க மறியல் காலத்தில் சுகயீமடைந்திருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை ‘மேர்ச்சன்ட்’ (கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுதல்) வாட்டில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றும் சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

வைத்தியர்களின் ஆலோசனையின் பின்பே, அவர் வீடு திரும்ப முடியும் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை ‘மேசன்ட்’ வாட்டுக்குரிய ‘லிப்டை’ ஆஸாத் சாலி பவுண்டேசன் மூலம் புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்