அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை

🕔 December 2, 2021

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை இன்று (02) பிறப்பித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில், கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆசாத் சாலியை கைது செய்தனர்.

இதேவேளை, தடுப்புக் காவலில் இருந்த போது சுகயீனமுற்றிருந்த ஆசாத் சாலி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததோடு, நீதிமன்றத்துக்கு ஆஜாரான சந்தர்ப்பங்களில் சக்கர நாற்காலியிலேயே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையையும் சீர்குலைக்க முற்பட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ஐசிசிபிஆர்) ஆகியவற்றின் கீழ் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்