வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

🕔 October 29, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டமான வவுனியாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று மாலை (29) வவுனியா – சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த றிசாட் பதியுதீனை பெருந்திரளான மக்கள் வரவேற்று, அவருக்கு தமது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், தாய்மார்கள், சமூக நலன் விரும்பிகள் என – பல்வேறு மட்டத்தினரும், றிசாட் பதியுதீனைக் காண அங்கு ஆவலுடன் குழுமியிருந்தனர்.

அங்கு வருகை தந்திருந்தவர்கள், மக்கள் காங்கிரஸ் தலைவரின் சுகநலன்களை விசாரித்ததுடன், அவரை ஆரத்தழுவி அன்பைத் தெரிவித்தனர். அங்கு வந்திருந்த தாய்மார்கள் தமது தலைமை மீதான பற்றை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், மக்களுடன் அளவளாவிய றிசாட் பதியுதீன், தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments