ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு

🕔 October 29, 2021

ஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அதன் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் தரப்பினருடன் தொடர்புடையவர்கள் எனவும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காகச் சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments