புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

🕔 October 3, 2021

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் (வயது 81) இன்று காலமானார். இவர் தனது எழுத்துக்களுக்காக பலமுறை சாகித்த விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் காத்தான்குடி.

முகம்மட் ஷெரீப் எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஜுனைதா ஷெரீப் எனும் புனைப் பெயரில் எழுதி வந்தார்.

கிழக்கு முஸ்லிம்களின் கலாசாரங்கள் மற்றும் கிராமிய வழக்குகளை தனது எழுத்துக்களில் மிகவும் நுண்ணுணர்வுகளுடன் பதிவு செய்தவர் ஜுனைதா ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘சாணைக்கூறை’ எனும் நாவல் மிகவும் புகழ்பெற்றது.

Comments