08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

🕔 September 27, 2021

சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

அதன்படி இன்று காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையிலான 05 மணித்தியாலங்கள் – இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதற்கிணங்க அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் (GNOA) இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

08 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

  1. கொவிட் 19ஐ எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் முறையான வசதிகளை வழங்க வேண்டும்.
  2. தொற்றுநோய் முடியும் வரை 7500 ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்க வேண்டும்.
  3. விடுமுறை மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதிலுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்.
  4. அனைத்து சேவைகளிலும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  5. சுகாதார சேவைகளை மூடிய சேவையாக ஆக்க வேண்டும்.
  6. பல்நோக்கு அபிவிருத்திப் படை ஊழியர்களை சுகாதார சேவைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
  7. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கொவிட் சிறப்பு விடுமுறைகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.
  8. ஊழியர் சேவை நிலை தொடர்பான சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

Comments