உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

🕔 August 30, 2021

லக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோகிராம் சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ராஜினாமா செய்ய வேண்டும்.

ராஜினாமா செய்யாமல் பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் பெறுகிறார்.

ஒரு கிலோகிராம் சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதிக்கிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது” என்றார்.

Comments