அம்பாறை பொது வைத்தியசாலைக்கு நிதி திரட்டல் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வென்ரிலேட்டர் அன்பளிப்பு

🕔 July 14, 2021

– யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் –

ம்பாறை பொது வைத்தியசாலைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான வென்ரிலேட்டர் உபகரணம் நேற்று செவ்வாய்கிழமை வழக்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட திறன் வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் இது கொள்வனவு செய்யப்பட்டது.

வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் உப்புல் விஜயநாயக்கவிடம் மேற்படி வென்ரிலேட்டர்கள் கையளிக்கப்பட்டன. 

இன் நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் திலக் ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

இந்த வென்ரிலேட்டர் கொள்வனவுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட தொகையில் அதிகூடிய தொகையை வழங்கியிருந்த சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இந்த நினைவுச் சின்னத்தை சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.எம்.முபாரக், நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கச் செயலாளர் எம்.எப்.ஏ. வாசித் ஆகியோர்ரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்