பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது

🕔 April 13, 2021

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் – பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அசேல சம்பத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வீடியோ ஒன்றினை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கைது செய்திருந்தார்.

அசேல சம்பத் கைதானதை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ள போதிலும், அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டார் எனும் விவரங்களை வெளியிடவில்லை.

அண்மையில் அசேல சம்பத்துக்கு எதிராக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்த குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். அதில், சதொச ஊடாக தாம் வழங்கிய நிவாரணப் பொதி தொடர்பில் அசேல சம்பத் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Comments