பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

🕔 March 29, 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச நியமம் மற்றும் சைபர் இணையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இணையத்தளம் மற்றும் யூரியூப் தளம் என்பன இயங்கி வந்த இடத்தில் இருந்து 05 மடிக்கணினிகளையும், 05 கணினிகளையும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கைதானவர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘Tube தமிழ்’ மற்றும் ‘தமிழ் கொடி’ ஆகியவற்றினை இயக்கி வந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ‘Tube தமிழ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்