ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

🕔 March 14, 2021

நாட்டுச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் தொடர்பாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கடந்த 09ஆம் திகதி கூறிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற, ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிடங்கிய ஐவர், இந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், அவற்றில் ஒன்று பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் கடந்த 09ஆம் திகதி ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்தொன்றினை, சில ஊடகங்கள் தமது தேவைக்கேற்ப மாற்றி, செய்தியாக வெளியிட்டதாகவும், நாட்டுச் சட்டத்தை மதிக்க மாட்டேன் என, தான் ஒருபோதும் கூறவில்லை என்றும், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்