சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

🕔 February 16, 2021

ரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய சரத் வீரசேகரவை விடவும் அரசியலில் – தான் அதிகம் சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நீங்கள் எங்கள் இருவரையும் அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால், அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ எடையும், நான் 100 கிலோ எடையும் இருப்போம். இதைச் சொல்ல நான் பயப்படவில்லை.

நாங்கள் ஒரு பாதையில் சென்றோம், அவர் வேறு பாதையில் சென்றார். 2015ஆம் ஆண்டு அவர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், எங்கள் அரசியல் இயக்கத்தை உருவாக்குவதில் – எங்களுடன் இணையுமாறு அவரைக் கேட்டோம்.

ஆனால் அவரிடம் வேறு திட்டங்கள் இருந்தன” எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்