தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு

🕔 February 1, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

பிரதமரின் விஜேராம இல்லத்திலுள்ள தனிப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (29ஆம் திகதி) பிற்பகல் இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இருப்பினும் இந்த வீடியோவானது, பிரதமர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதையும், அவர் அன்றாட உடற்பயிற்சியை சிரமமின்றி கொள்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

மஹிந்த ராஜபக்ஷ – எப்போதும் அவருடைய உடல்நலத்தில் கவனம் செலுத்தும் அரசியல்வாதியாக பார்க்கப்படுகின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும்போது, இடையில் ஓய்வு எடுத்திருந்தார். இதனையடுத்து அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழத் தொடங்கின.

வீடியோ

Comments