சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு

🕔 January 9, 2021

– எம்.என்.எம். அப்ராஸ் –

ர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் (ஃபிஃபா  – FIFA) நடுவராக கல்முனையை சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும்.

இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட 06 பேர் பிரதான நடுவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நடுவர்களில் இவர் மட்டுமே தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் பல திறமைகளை வெளிக்காட்டியுள்ள இவர், தேசிய மற்றும் உள்ளூர் உதைப்பந்தாட்ட போட்களில் பிரதான நடுவராகவும் கடமையாற்றியுள்ளார் .

தனது 16 வது வயதில் 2010 ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் FFSL Grade -lll இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்து நடுவராக தனது பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2012 ல் FFSL Grade – ll REFEREE யாகவும் 2017ல் FFSL Grade – l REFEREE யாக சித்தியடைந்து தரமுயர்த்தப்பட்டார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டிகளில் மிகத் திறமையாக மத்தியஸ்துவம் செய்து FFSL (NATIONAL ELITE REFEREE ) யாக உயர்ந்தார். குறிப்பாக 2020 FFSL Champion League அரை இறுதிப் போட்டியில் REFEREE யாக கடமையாற்றிார்.

ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC REFEREE ACADEMY யில் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் 04 வருடங்களைக் கொண்ட REFEREE COURSE யினை இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அத்துடன் இவர் FIFA வினால் நடத்தப்பட்ட FIFA REFEREEING MA WORKSHOP யில் மூன்று தடவை பங்குபற்றியுள்ளார்.

இவர் மாலைதீவு Champion League போட்டிக்கு மத்தியத்துவம் செய்ய இரண்டு தடவை மாலைதீவுக்கு சென்று சர்வதேச ரீதியாகவும் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றும் இவர், இப் பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

புதிது பேஸ்புக் பக்கம்