அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

🕔 January 5, 2021

துரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியிலும் அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் பௌத்த மதகுரு எனும் வகையில் இவர் மட்டுமே உறுப்பினராக உள்ளார்.

கடந்த ஆட்சியில் ஆளுநராக இருந்த ஹிஸ்புலா மற்றும் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதற்கு, அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்ட உண்ணா விரதம் காரணமாக இருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெற்று 05 மாதங்கள் கடந்த நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டியல் மூலம் கிடைத்த உறுப்புரிமைக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்