ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்

🕔 December 24, 2020

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஜீவன் தொண்டமான் பங்குபற்றியமை தெரிய வந்தமையை அடுத்தே, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருடன் நெருங்கி பழகிய சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் நேற்று புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: அக்கரப்பத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

Comments