ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

🕔 December 22, 2020

ஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் கால எல்லை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்டம்பரில் நியமித்தார்.

2019 ல் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார். அதன் அடிப்டையில் அந்தக் குழுவானது ஜூன் மாதம் தமது விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.

மேலும் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை பதிவு செய்ய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் மற்றும் பிற நபர்கள் ஆஜரானார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்