முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை

🕔 December 20, 2020

கொரோனாவினல் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்க மறுக்கும் முடிவை மாற்றுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

அவரின் ‘யுடியுப்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களும் தனக்கு கிடைக்கும் வரை, தான் எந்தவித அறிக்கைகளையும் வெளியிடவில்லை எனக் கூறியுள்ள அவர்; இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கலந்தாலோசித்த பின்னர், கட்டாய தகனத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் ஆதாரமற்றவை என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதென்பது முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு நடைமுறை.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான மத நடைமுறையை பின்பற்றுவதற்கு நியாயமான உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது. இந்த உரிமை யாருக்கும் தீங்கு விளைவிக்காதது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்