
தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் தனது திட்டங்களில் சேர்க்கத் தவறியுள்ளதால், பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.



