அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

🕔 December 17, 2020

டந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு மற்றும் ஒலுவில் 02ஆம் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

அதேபோன்று அக்கரைப்பற்று 14, 05ஆம் பிரிவுகளும், நகர் பிரிவு 03, அக்கரைப்பற்று பிரதான சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும் ஆலையடிவேம்பு 08/01, 08/03 மற்றும் 09 ஆகிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும்.

இப்பகுதிகளில் கூட்டங்கள், வைபவங்கள் நடத்துவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்