நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

🕔 December 8, 2020

கொரோனாவுக்கான மருந்து எனக் கூறி தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியர் ஒருவர் – தனது வீட்டின் முன்பாக வைத்து, இன்று 05 ஆயிரம் குடும்பங்களுக்கு அதனை வழங்கி வைத்தார்.

கேகாலை, ஹெட்டிமுல்ல – உமாகம பகுதியில் இவ்வாறு அவர் இந்த மருந்தை வழங்கி வைத்தார்.

ஏற்கனவே இவர் இவ்வாறு மருந்தை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தமையினால், அவரின் வீட்டின் முன்பா 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கூடினர். அதனால் பாரிய நெரிசல் ஏற்பட்டது.

குறித்த மருந்தை பொலிஸார் மற்றும் ராணுவத்தினரும் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.

பௌத்த பிக்குகளின் சமய நிகழ்வுடன் இந்த மருந்து வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

இவர் தயாரித்த இந்த மருந்தை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சில தினங்களுக்கு முன்னர் அருந்தியிருந்தார்.

எவ்வாறாயினும் தம்மிக பண்டார எனும் மேற்படி நாட்டு வைத்தியரின் இந்த மருந்து சட்டவிரோதமானது என்று, ஆயுர்வேத வைத்தியர் சங்கமொன்று அண்மையில் புகார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தொடர்பான செய்தி: சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

Comments