நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

🕔 November 16, 2020

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு மாறாக டயானா கமகே ஆதரவளித்தமை காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்