கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு

🕔 October 29, 2020

– சர்ஜுன் லாபீர் –

ல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அண்மையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுறுத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபிபுல்லா கலந்து கொண்டு, கிராம சேவர்களிடம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சானும் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்