கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

🕔 October 27, 2020

கொரோனா காரணமாக நாட்டில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும்கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

75 வயதுடைய பெண் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக சுகயீனத்துடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19 வயதுடைய இளைஞன் பிறப்பிலிருந்தே விசேட தேவையுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

Comments