கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 October 22, 2020

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை ஏற்றவும் அனுமதியில்லை. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 9.00 மணி நிலைவரப்படி, நாட்டில் கொரோனாவினால் இதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5,977 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3,501 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2,463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்