20 மீதான வாக்கெடுப்பு இன்று; கூட்டணியின் முழு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்: எதிரணியிலிருந்து சிலர் தாவக் கூடும்

🕔 October 22, 2020

ரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கமானது, ஆளும் கூட்டணியின் முழுமையான ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் அதிருப்தியைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் பிரதான எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிகின்றது.

குறைந்தபட்சம் எதிரணியிலிருந்து மூன்று பேரையாவது 20க்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கான பேரம்பேசுதல்கள் இன்று காலை வரையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதன்படி பிரதான எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் 20 க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்