அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை

🕔 October 17, 2020

– புதிது செய்தியாளர் –

க்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் பிற்பகல் வரை ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டது.

ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே, இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது.

ஆயினும் இதன்போது சந்தேகத்குரிய எவ்வித பொருட்களும் சிக்கவில்லை என அந்த இடத்தில் இருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்