முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

🕔 October 12, 2020

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவர் கடந்த 05 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை மைத்திரி சாட்சியமளித்த போது தெரிவித்த சில விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இதே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்