ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு

🕔 September 30, 2020

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் ​தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து நேற்று மாலை 5.00 மணியளவில் அவர் வெளியேறினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்