பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

🕔 August 7, 2020

டந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக

அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,853,693 (59.09%) 128 ஆசனங்களை வென்று 17 தேசியப்பட்டியல் ஆசனங்களையம் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி – 2,771,984 (23.90%) 07 தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 54 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 4,45,958 (3.84%) ஒரு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 03 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 3,27,168 (2.82%) ஒரு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 10 ஆசனங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) தேசியப்பட்டில் ஊடாக 01 ஆசனம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – தேசியப்பட்டியல் உட்பட 02 ஆசனம்.

அபே ஜன பல – 67,758 (0.58%) – தேசியப்பட்டியல் ஊடாக 01 ஆசனம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 67,692 (0.58%) 01 ஆசனம்.

சிறிலங்கா சுதந்திர கட்சி – 66,579 (0.57%) 01 ஆசனம்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 61,464 (0.53%) 02 ஆசனங்கள்

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 55,981 (0.48%) 01 ஆசனம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – (0.44) 1 ஆசனம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 01 ஆசனம்.

தேசிய காங்கிரஸ் – 39,272 (0.34%) 1 ஆசனம்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 34,428 (0.3%) 01 ஆசனம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்