“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

🕔 July 30, 2020

– அஹமட் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் குறித்து, அதே கட்சி சார்பாக போட்டியிடும் ச க வேட்பாளர் ஏ.எல். தவம் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியதை அடுத்து, நஸீர் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாகத் தெரிய வருகிறது.

“நஸீருக்கு ‘வோட்’ (வாக்குகள்) இல்லை, கஷ்டமான சூழ்நிலை. நஸீர் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறான் – தேர்தலில் இருந்து ‘விட்ரோ’ பண்ணுவோமா (விலகுவோமா) என யோசித்துக் கொண்டிருக்கிறான்” என்று, அந்தக் குரல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

குறித்த குரல் பதிவைக் செவியுற்ற பலர், அது – தவத்தின் குரல்தான் எனக் கூறுகின்றனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எல். தவம்; முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடுகின்றார்.

இந்த குரல் பதிவு வெளியானதை அடுத்து நஸீர் தரப்புக்கும், தவம் தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 06 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்குள் விருப்பு வாக்குப் பெறுவதில் கடும் போட்டியும், குழி பறிப்புகளும் நடப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

குரல் பதிவு

இது தொடர்பில் வெளியிடப்பட்ட பிந்திய செய்தி: நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்