நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்

🕔 July 14, 2020

– முன்ஸிப் அஹமட் –

கோழியொன்று அடைகாத்த முட்டையொன்றிலிருந்து நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளது.

அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதியிலுள்ள – தச்சுத் தொழில் செய்யும் ஜலால் என்பவரின் வீட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

13 முட்டைகளை கோழியொன்றின் மூலம் தான் அடைகாக்கச் செய்ததாகவும், அந்த முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரித்ததை அடுத்து, இன்று செவ்வாய்கிழமை அனைத்துக் குஞ்சுகளையும் வெளியில் எடுத்துப் பார்த்த போது, அதில் ஒரு குஞ்சுக்கு 04 கால்கள் இருப்பதை தாம் அவதானித்ததாகவும் ஜலால் கூறினார்.

மேற்படி கோழிக்குஞ்சுக்கு சாதாரணமாக உள்ள கால்களின் பின்பக்கமாக மேலும் இரு கால்கள் உள்ளன. இந்தக் கால்கள் சாதாரண கால்களை விடவும் அளவில் சிறியதாக உள்ளன.

குறித்த கோழிக்குஞ்சு சரியாக நடக்க முடியாமலும், சோர்வாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments