தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

🕔 June 26, 2020

– அஹமட் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஏ.எல்.எம். நஸீர் – சிறுவர்களை தனது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனமும் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, சிறுவர்களை நஸீர் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள் சிலவற்றினை, புதிது செய்தித்தளத்துக்கு சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

எவராவது சிறுவர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினால், அது குறித்து பொலிஸ் நிலையங்களிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட இடங்களில் முறைப்பாடு செய்ய முடியும்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிடுவதாயின் அதற்கான விவரம்

முகவரி: தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலக்கம் 330, தலவத்துக்கொட வீதி, மாதி வெல; ஸ்ரீ ஜயவர்த்தனபுர.

தொலைபேசி: +94 11 2 778 911 – 12 – 14

தொலைநகல்: 0112 778 815

மின்னஞ்சல்: investigation@childprotection.gov.lk

Comments

புதிது பேஸ்புக் பக்கம்