சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

🕔 May 27, 2020

– அஹமட் –

ம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அணியாத நிலையில், மேற்படி இடங்களில் பணியாற்றுவோர் உணவுப் பொருட்களைப் பரிமாறுவதாகவும் விற்பனை செய்வதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று அபாயம் தொடர்சியாக இருந்து வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட பிராந்தியத்திலுள்ள தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில் பணியாற்றுவோர், சுகாதார நடைமுறை தொடர்பில் மிகவும் அலட்சிய முறையில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆயினும் இந்தப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்விடங்களுக்கு அடிக்கடி வருகை தருவதையோ, திடீர் பரிசோதனைகளை நடத்துவதையோ காணக்கிடைக்கவில்லை எனவும் பொதுமக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

ஊடரங்கைத் தளர்த்தி, உணவுப் பொருட்களை பொதுமக்கள் நுகரும் இவ்வாறான இடங்களையும் அரசாங்கம் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கெல்லாம் சுகாதார நடைமுறைகள் பின்னபற்றப்படுகின்றனவா என்பதை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டிமை அவசியமாகும்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இது தொடர்பில் உடனடிக் கவனமெடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்