நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

🕔 May 12, 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார்.

“கடந்த தேர்தலுக்கு 700 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அது – எதிர்வரும் தேர்தலுக்கு இரண்டு மடங்காகும் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது” என்றும் அவர் தெிவித்தார்.

இதேவேளை அங்கு பேசிய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க; “நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், ஆகக்குறைந்தத 1500 கோடி அல்லது 2000 கோடி ரூபாய் செலவாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்