இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம்

🕔 April 25, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்த பின்னர், மீண்டும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும், அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக மாட்டார்கள் என்பதற்கும் எந்த விதமான ஆதாரமும் இதுவரை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பொருட்கள் உண்டாகும் என்றும், அது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாவதை தடுக்கும் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்