அம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா? தீர்வைப் பெற அழையுங்கள்

🕔 April 9, 2020

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் வழங்கி வருகின்ற நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமாயின், அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறு அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு, இரு வகையான கொடுப்பனவுகளை துரிதமாக வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை சமுர்த்திப் பணிப்பாளர் சப்றாஸ் விளக்கமளித்த போதே, இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“எமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவறிய மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கான  சலுகைக் கடன்10000 ரூபா (சஹன பியவர) கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அத்துடன் சமூர்த்தி நிவாரணம் பெறாத, ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்களுக்கான மானியக் கொடுப்பனவு 5000 ரூபாவினையும் தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.

இத்திட்டமானது 20 பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து ஏறத்தாழ 43 சமூர்த்தி வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

20 பிரதேச செயலகங்கள்  மற்றும் ஏறத்தாழ 43 சமூர்த்தி வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்து, கொரோனா வைரஸ் அனர்த்தங்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வறிய  குடும்பங்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை எமது சமமுர்த்தி  திணைக்களம், தற்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

 இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் 90,128 சமுர்த்தி  நிவாரணம் பெறக்கூடிய குடும்பங்கள்  காணப்படுகின்றன.

அவற்றில் முதல் கட்டமாக அரசாங்கத்தின் ஆலோசனைப்படி 60,125 பேருக்கான சகன பியவர எனும் இலகு கடன் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

அதற்காக மொத்த செலவீடாக  306  மில்லியன் ரூபாவை, சமூர்த்தி வங்கிகள் ஊடாக ஒதுக்கி, தற்பொழுது முதல்கட்டமாக ரூபா 5000 ரூபாவை சமூர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதே நேரம் அருணலு இலகு கடன் வசதி அடிப்படையில், சமூர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் ஊடாக, 22,266 குடும்பங்களுக்கு 112 மில்லியன் ரூபாய்களை வழங்கி உள்ளோம்.

மொத்த தொகை  ஏறத்தாழ  418 மில்லியன் ரூபாய்களை இலகு கடன்களாக, சமுர்த்தி நிவாரணம் பெறக் கூடிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றோம்.

அதற்கு மேலதிகமாக தற்பொழுது ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, சமுர்த்தியை  பெறுவதற்கு தகுதியான குடும்பங்களுக்கு 5000 ரூபாயை மானியமாக வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை, அம்பாறை மாவட்டத்தில் 43 சமூர்த்தி வங்கிகளின்  ஊடாக நாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம்

இந்த மானியத் தொகையானது இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகின்றது. முதற்கட்டமாக சமுர்த்தி உதவி தொகை பெறுவதற்காக காத்திருப்பு பட்டியலில் காணப்படக்கூடிய 35,133 குடும்பங்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளோம்

அடுத்து கொரோனா வைரஸ் அனர்த் நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும்  இழந்த  ஏறத்தாழ 28,535 மக்களுக்கான 5000 ரூபா வழங்கக்ககூடிய மானியத்தையும், நாங்கள் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இதற்காக 318 மில்லியன் ரூபாய்களை அம்பாறை மாவட்டத்துக்காக நாங்கள்  வழங்க உள்ளோம். மொத்தமாக சேர்த்து பார்த்தால் 63,668 குடும்பங்களை இந்த மானியத் திட்டத்தின் கீழ் நாங்கள் இணைக்கவுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தில்  சமூர்த்தி  பயனாளிகளுக்கு ஏற்படும்  சிக்கல்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்  வகையில்    ஒரு பொறிமுறையை  மாவட்ட சமுர்த்தி காரியாலயம்  மேற்கொண்டுள்ளது.

மாவட்ட சமூர்த்தி காரியலய  உள்ளக கணக்காய்வு பிரிவு மற்றும் வங்கியின் முகாமைத்துவப் பிரிவு ஆகியவை 24 மணித்தியாலமும்   கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

அதனடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு  பிரதேசங்களுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு  அதிகாரியை நியமித்துள்ளோம். இவ்வதிகாரிகளை தொடர்பு கொண்டு  பிரச்சினைகளுக்குரிய  உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த பிரச்சனைஅவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால், என்னை நேரடியாக  தொடர்புபடுத்த முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் சிங்கள மொழி பேசுவோரின் பிரச்சினைகளுக்கு மாவட்ட முகாமையாளர் தசநாயக்கா என்பவரை  0760707125 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை நாவிதன்வெளி, கல்முனை மற்றும் இறக்காமம் வரை உள்ள பிரதேசங்களில் எழுகின்ற பிரச்சினைகளின் பொருட், மாவட்ட வங்கி முகாமையாளர் ஹனீபா (0777004761) மற்றும் உள்ளக கணக்காய்வு  உத்தியோகத்தர் அமீர் அலி (0777531024)  ஆகியோரை தொடர்பு கொண்டு முறையிட முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்