கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

🕔 April 4, 2020

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே இன் இல்லத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அதிகம் செலவாகும் என்பதுடன் மக்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments