மு.கா. தலைவரின் கழுத்தில் தொங்கும் மாலையும்; அது சொல்லும் உளவியல் குறியீடும்

🕔 February 25, 2020

முஸ்லிம் காங்கிரஸுக்குள் 2015ஆம் ஆண்டு வரைதான் அதிகாரம் என்பது குறைந்த அளவிலாயினும் பன்முகத் தன்மையுடன் இருந்ததாகவும், கலந்துரையாடல் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரவித்துள்ளார்.

கண்டி பொல்கொல்லயில் நேற்று முன்தினம் நடைபெற்ற 29ஆவது பேராளர் மாநாட்டில்முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற சில நிகழ்வுகளை குறிப்பிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

‘முஸ்லிம் காங்கிரசின் 2015 ஆம் ஆண்டைய பேராளர் மாநாடு பொல்கொல்லையில் நடைபெற்ற போது, மூவரின் கழுத்தில் மாலைகள் இருந்தன. இம்மாநாடு 2020 இல் அதே இடத்தில் இடம்பெற்ற போது ஒருவரின் கழுத்தில் மட்டும் மாலை ஒய்யாரமாக வீற்றிருக்கிறது.

இது கட்சியில் ஒற்றை சர்வாதிகாரம் – நிலை நிறுத்தப்பட்டிருப்பதையும், கட்சியின் உச்ச பீடத்தில் தலைவரை தவிர வேறு எவரும் கௌரவம் பெற தகுதியில்லை என்பதையும் குறிக்கிறதா?

கழுத்தில் மலர் மாலைகள் அணிவிப்பது முக்கியமல்ல. ஆனால் மாலைகள் சொல்லும் செய்தியும் குறியீடும் அதன் உளவியல் வெளிப்பாடும் முக்கியமானவையாகும்.

2015 ஆம் ஆண்டுதான் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் என்பது குறைந்த அளவிலாயினும் பன்முகத் தன்மையுடன் இருந்த மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட இறுதி வருடமாகும்.

அந்த வருடம் வரைதான் – இரண்டு தைரியமான குரல்கள் உள்ளே இருந்தன என்பதையும் மாலைகள் காட்டுகின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தைரியமான குரல்கள் என்று – மு.காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலியையும், தன்னையுமே பஷீர் சேகுதாவூத் இங்கு சுட்டிக்காடட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்