18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை

🕔 February 20, 2020

நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு குற்றங்கள் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.

இதேவேளை, இதுபோன்ற போதைவஷ்துப் பாவனை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை 0777128128 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்வி அமைச்சு, பொலிஸார் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவை இணைந்து பாடசாலைமாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையின் அபாயகரமான விளைவுகள் குறித்து அறிவூட்டுவதற்காகவும், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் சிறப்பு விழிப்புணர்வு திட்டங்களை நடத்தவுள்ளன.

இந்த விழிப்புணர்வு திட்டத்தின் முதல் கட்டமாக, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு போதைப்பொருள் பாவனை இடம்பெறும் 49 பாடாசாலைகள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு விழிப்புணர்வு திட்டம் நேற்று (18) ‘பாதுகாப்பான நாளை’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்