சஜித் தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

🕔 February 18, 2020

ஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணிக் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘சமகி ஜன பலவேகய’ எனும் பெயரில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்தச் சின்னத் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நீண்ட இழுபறி இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள், அன்னம் சின்னத்திலேயே போட்டியிட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments