அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

🕔 February 18, 2020

பொது தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. ஆயினும், இவற்றில் பல கட்சிகள் எந்தவொரு தேர்தல்களிலும் மிக நீண்ட காலமாக போட்டியிடாமல் உள்ளன.

இந்த நிலையில், தற்போது மிக அதிகளவான அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments