10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

🕔 February 15, 2020

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர். 

குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 

மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி இருவருமே 25 வயது மதிக்கத்தக்க, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Comments