அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

🕔 February 13, 2020

டந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும்  விசேட ஆணைக்குழுவின் தலைவர் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

கொழும்பு 02, பார்க் வீதியில் அமைந்துள்ள, இலக்கம் 23, பார்க்லன்ட் கட்டடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு தபால் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

Comments